கோவை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.!!

 

     -MMH

  கோவை மாவட்டம்  வால்பாறைஎம்.கே.எஸ் திருமண மண்டபத்தில் நேற்று கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் ரவி தலைமையில், கோவை கோட்ட செயலாளர்கள் T.பாலச்சந்திரன், S.அசோக் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வால்பாறை பொறுப்பாளர் சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும்  மாநிலச் செயலாளர் C.M அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.


 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1, 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மதுரையில் பயங்கரவாதிகளால் படுகொலையான இந்து முன்னணி முன்னாள் மாநிலத் தலைவர் அட்வகேட் இராம கோபாலனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

2, பெரிய மாவட்டமாக பரந்து விரிந்து இருக்கிற கோவை மாவட்டம் நிர்வாக வசதிக்காகவும்,

மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்க செய்யவும் கோவை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3, எல்லா வேலைகளும் இயல்பாக நடக்கின்ற இந்த சூழ்நிலையில் கோவில்களும் கோவில் திருவிழாக்களும் தடை செய்யப்படுகிற தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4, உடனடியாக தமிழக அரசு கோவில்களை வழிபாட்டுக்கு திறந்த விடவும் திருவிழாக்களை நடத்த அனுமதி கொடுக்கவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

5, மேற்கு தொடர்ச்சி மலை பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் கடத்துகின்ற சமூக விரோதிகளுக்கும் மாறி வருகிறது ஆகையால் மலைப்பகுதிகளை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும்,நகர ஒன்றிய நிர்வாகிகளின்  தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments