ஒரு ஓட்டு..!! வெற்றி, தோல்வி, ஒரே ஒரு வாக்கு பதிவு..!! உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சுவாரசிய சம்பவங்கள்..!!


  -MMH

 ஒற்றை வாக்கு எவ்வளவு வித்தியாசங்கள் உண்டு பண்ணும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த சுவாரசிய சம்பவம்..

ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்ற குருடம்பாளையம் ஊராட்சி  பாஜக வேட்பாளர் செய்தி வைரலாக ட்ரெண்டிங் ஆகி வந்து கொண்டிருக்கும் நிலையில். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தட்டிச்சென்றுள்ளார் திருச்சி லால்பேட்டை, சிறு மருதூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கடல் மணி என்பவர். தலைவர் ரமேஷ் இறக்கவே  இடைத்தேர்தல் வந்த நிலையில் 454 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல் மணி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள வேட்பாளர் 453 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் வெற்றியை நிர்ணயித்த  அந்த ஒரு விரல் புரட்சி.. மகிழ்ச்சியில் வேட்பாளர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments