பொள்ளாச்சியில் உள்ள செல்போன் கடையில் கொள்ளை..!!

-MMH

  கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். 

நள்ளிரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கு இருந்து 6 செல்போன்கள், 1 லேப் டாப், 6 சர்வீசுக்கு வந்த 6 செல்போன்கள், 2 புளுடூத் ஸ்பீக்கர், 12 புளுடூத் உள்பட ரூ.24, 500 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.பொள்ளாச்சி.

Comments