திரும்பத் திரும்ப பேசுற நீ...!! இந்தியில் பேசியதால் அடி உதை!!

     -MMH

கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி, உடையாம்பாளையம் பகுதியில் செருப்பு வாங்க வந்தவர் இந்தியில் பேசியதால் கோபமடைந்த செருப்பு கடை உரிமையாளர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு அடி உதை கொடுத்துள்ளார். இளைஞர் புகார் அளித்ததன் பேரில் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீப் செருப்பு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் இந்தியில் பேசியதாக கூறப்படுகிறது. ஹிந்தி புரியாத நாகராஜ் அவரை தமிழில் பேச சொல்லி இருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோபமடைந்த  நாகராஜ் பிகார் மாநில இளைஞர் பிரதீப் குமார்ஐ தகாத வார்த்தையால் திட்டி அருகில் இருந்த கட்டையால் தாக்கியுள்ளார். இதைப்பற்றி பிரதீப்குமார் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments