திரையரங்குகளில் வெளியான ருத்ரதாண்டவம்!! இந்து மக்கள் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடல்!!

 -MMH

கோவையில் திரையரங்குகளில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கோவையில் திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள்  சார்பில் அப்படம் வெளியான திரையரங்கில் சிறப்பு பூஜை செய்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மதம் மாற்றம் செய்யும் நபர்களை தோலுரித்துக் காட்டும் விதமாகவும் போதைப் பொருட்களிலிருந்து இளைஞர்களை காப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ருத்ரதாண்டவம் திரைப்படம் இயக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாக வேண்டும் என்றும், ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தங்களின் முழு ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார். 

- சீனி,போத்தனூர்.

Comments