நாடு போற்றும் சேவை..!! சுகாதாரம் நம் தேவை..!! இவர்கள் மீது ஏன் அலட்சியம்...!!!

 

  -MMH

   கோவை மாவட்டம் சரவணம்பட்டிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதி, ஜிம் தெரு காலை 8  மணி பரபரப்பான நேரம் மக்கள் வாகனங்களில் நேர்கொண்ட பார்வையோடு தங்களின் தேவைகளுக்காக அந்த சாலையை கடந்து கொண்டிருந்தன. 

ஒரு ஓரத்தில் குப்பை மேடு  அந்த குப்பைமேட்டின் அருகாமையில் 5 சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்கு உண்டான பாணியில் பேசிக்கொண்டே  துர்நாற்றம் வீசும் அந்த குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஐயோ என்ன பரிதாபம் எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் அவர்கள் அணிந்திருக்கவில்லை. வெறும் கைகளில் கிளவுஸ் இன்றி குப்பைகளை அள்ளியவாரு , முகத்தில் மாஸ்க் இல்லை, கால்களில் பூட்ஸ் இல்லை.  எதும் இன்றி தங்களின் எந்த  நலனைப் பற்றியும் அக்கறை இல்லாதவர்களாக மிக சாதாரணம்மாக தங்கள்  பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். 


இதைப்பார்த்த என் மனம் சற்று கலங்கவே என் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி அருகாமையில் சென்றேன் என்ன அவலம் குடலைப் புரட்டும் துர்நாற்றம் மாஸ்க் அணிந்தும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் அருகாமையில் சென்ற நான் அவர்கள் மத்தியில் அண்ணே "வணக்கம்" என்று கூறினேன். அவர்களும் பதிலுக்கு என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் துப்புரவு வேலையை தொடர்ந்தனர். நான் அவர்களை விடப்போவதில்லை என்றும் முடிவு செய்தவனாக என்னண்ணே  கிளவுஸ் கூட இல்லையா , மாஸ்க் போடல  இதெல்லாம் இல்லாம எப்படி  வேலை செய்றீங்க என்று கேள்வியை எழுப்பினேன். இதை யாரும் கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்த்தவர்களைப்போல  என்னிடம் எங்கங்க கிளவுஸ் கொடுத்தாங்க கிழிஞ்சு போச்சு மறுபடியும்  கேட்டும் இன்னும் கொடுக்கவே இல்லைங்க. மாஸ்க் கூட கேட்டுக் கேட்டுப் பார்த்தோம்  தரல என்று பரிதாபமாக கூறிய துப்புரவு பெண்மணி எங்க நிலைமை நீங்க பாக்கறீங்க இல்ல  உங்கள மாதிரி உள்ள ஆளுங்க நாங்க படுற கஷ்டத்தை எங்க அதிகாரி கிட்ட சொல்லுங்க எங்க  மேலயும் அக்கறை காட்ட கொஞ்சம் எடுத்து  சொல்லுங்க என்று வெகுளித்தனமாக சொன்ன  அந்தத் தாய்க்குலத்தின் வார்த்தை என் மனதை உலுக்கிப் போட்டது. இதெல்லாம் கூட நாங்க பொறுத்துக்குவோங்க இன்னைக்கு தேதி 11 ஆச்சு  எங்களுக்கு இன்னும் சம்பளம் கூட  போடலிங்க இப்படி இருந்தா எப்படிங்க  நாங்க பொழப்ப ஓட்றது  என்று கலக்கத்தோடு கூறினார். உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்  என்று சொன்னேன் அதற்கு அவர்கள் தாராளமாக  நீங்களாவது நாங்க படுற கஷ்டத்தை போட்டோ எடுத்து அரசாங்கத்துக்கு எங்க மேல கருணை காட்ட சொல்லி எழுதுங்க என்று சொன்னார்கள். நானும் சரிங்க என்று சொல்லிவிட்டு  நிச்சயமா உங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று ஆறுதல் கூறியவனாக அவர்களுக்காக இந்த பதிவை நாளைய வரலாறு இதழின் செய்தியாக. அரசு இவர்களின் கோரிக்கையை உடனே கவனத்தில் எடுத்துக்கொண்டு இவர்களின் நலன்  காக்க முன் வரவேண்டும்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments