மனித நேயமிக்க ஆட்டோ ஓட்டுனர்!!

 -MMH

 நேற்று C2 பந்தயசாலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ரெட்பீல்ட்ஸ்-யை சேர்ந்த விஜய் (32) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆட்டோவில் சாந்தி தியேட்டர் வரை, ரயில் நிலையம் சென்றவர் தவறுதலாக ஆட்டோவில் தங்களது கைப்பையை தவற விட்டுவிட்டனர். மேற்படி கைப்பையை தவறவிட்ட  TN66U2172 என்ற ஆட்டோவின் ஓட்டுனர் முருகதாஸ் (54) த/பெ.சக்திவேல், கதவு எண்-623,ரெங்கே கவுண்டர் வீதி, என்பவர் அந்த பையிலிருந்த பணம் ரூபாய் 4 லட்சம் மற்றும் துணிமணிகளுடன் உடனடியாக C2 பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விஜய் என்பவர் தனது பணம் மற்றும் துணிகள் தவறவிட்டது தொடர்பாக புகார் அளிக்க வந்தவரிடம் காவல் உதவி ஆணையர், காட்டூர் சரகம், திரு.E.சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நேர்மையாக, தனது ஆட்டோவில் தவறவிட்ட பணம் மற்றும் துணிகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments