செய்தியாளரை கொல்ல முயற்சி; கோவை பா .ஜ நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு...!!

  -MMH

   சொத்து பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்து கோவை பத்திரிகையாளர் பூபதி வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் மறைந்த ரங்கசாமிக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் 8 ஆண்டுகளாக தாய் தெய்வானை  மற்றும் அவரது மகனும் பத்திரிகையாளருமான கே.பூபதி வசிக்கின்றனர். ரங்கசாமி வாரிசுதாரர்களாக மொத்தம் 9 பேர் உள்ளனர். இதில் 7 பேர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த சொத்து மற்றும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு  ரங்கசாமி பெயரில் இன்னும் உள்ளது. இந்த சொத்து பிரச்சினையில் நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவரும் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ பொதுச்செயலாளர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி தொடர்ந்து தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார்.

இறுதியாக நீதிமன்றத்தில் தங்களுக்கும் தங்கள் உறவினர்களும் இடையில் உள்ள சொத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்வதாக வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து பேசிய பா.ஜ நிர்வாகியிடம் பத்திரிகையாளர் பூபதி மற்றும் அவரது தாய் தெய்வானை ஆகியோர் தெரிவித்தனர். 

தாக்கிய மற்றொரு பா.ஜ நிர்வாகி சந்திரசேகர்
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ நிர்வாகி, குடிநீர், மின் இணைப்பை 5-9-2021 ல் தெய்வானை அண்ணன் நாச்சிமுத்து மனைவி கார்த்திகேயனி மற்றும் கார்த்திகேயனி மருமகன் வடிவேல், செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் கூறி துண்டிக்க செய்தார்.

இதுதொடர்பாக மின் இணைப்பு வேண்டி பாலத்துறை மின்வாரியத்திற்கும், குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பஞ்சாயத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.


தாக்கிய நபர் நாச்சிபாளையம் புரோக்கர் பிரகாஷ்
இந்நிலையில் மேற்கண்ட கார்த்திகேயனி உள்ளிட்ட நபர்கள் சொத்து பிரச்சினையில் தங்கள் சொல்படி நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தெய்வானை, பூபதி ஆகியோரை தினசரி வீட்டுக்கு வந்து பா.ஜ நிர்வாகிகளின் ஆட்கள் டார்ச்சர் செய்தும் மிரட்டியும் வந்தனர்.

மேலும் பா.ஜ நிர்வாகி தூண்டுதல் பேரில் உறவினர்கள் மதுக்கரை காவல்துறையில் 17-9-21 ல் புகார் அளித்தனர். 

நீதிமன்றத்தை அணுகி, மேற்கண்ட சொத்து வழக்கில் தீர்வு பெற்று கொள்வதாக இருதரப்பிலும் மனு தரப்பட்டது.

சொத்து  பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி பஞ்சாயத்து செய்தார் என அவரே ஒப்புக் கொண்டு மதுக்கரை காவல்நிலையத்தில் எழுதி கொடுத்த கடிதம்.

இந்நிலையில் உறவினர்கள் 8 பேர் தூண்டுதலின் பேரில் கட்டப்பஞ்சாயத்தில் களம் இறங்கிய கவுண்டம்பாளையம் கில்மோர், உக்கடம் ரமேஸ், நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, பா.ஜ நிர்வாகி சந்திரசேகர், நாச்சிபாளையம் புரோக்கர் பிரகாஷ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் 27-9-2021 அன்று இரவு 8 மணியளவில், நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள 64 வயது மூதாட்டி தெய்வானை வீட்டுக்குள் புகுந்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர் பூபதியிடம் 2 போன்களை அப்பு (எ) கிருஷ்ணசாமி திருடிக் கொண்டு அடித்து உதைத்தார்.

"நீ பத்திரிகையில் புடுங்கிடுவியா? என சாதி பெயரை சொல்லி திட்டியும் ரீப்பர் கட்டை, கைகள், இரும்பு குழாயில் அடித்து குடிபோதையில் இருந்த கும்பல் தாக்கியது.

இதுகுறித்து புகாரின் பேரில், இதுவரை எப்.ஐ.ஆர் போட்டு வைத்து கொண்டு மதுக்கரை போலீசார் கைது நடவடிக்கை எடுக்காத நிலையில், தவறிழைத்த அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.

தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் பூபதியும் அவரது தாயும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பா.ஜ நிர்வாகி அப்பு என்கிற கிருஷ்ணசாமியை சொத்து விசயத்தில்  கட்டப்பஞ்சாயத்து பேசுமாறு தாங்கள் அணுகியதாக உறவினர்கள் பகிரங்கமாக அளித்த கடிதம்.

தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு கோவை பத்திரிகையாளர் ஆர்.கே.பூபதி மற்றும் அவரது 64 வயது தாய் தெய்வானை ஆகியோர் அனுப்பிய மனுவில்,

தங்கள் உயிர், உடமைக்கு பாதுகாப்பு கேட்டும், பா.ஜ நிர்வாகிகள் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, சந்திரசேகர், புரோக்கர் பிரகாஷ், கில்மோர், ரமேஷ் உள்ளிட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

துணிச்சலாக கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியது உறுதியான நிலையில் 15 நாட்களுக்கு மேலாகியும்.பா.ஜ நிர்வாகிகள் கும்பலிலும், தூண்டுதலாக இருந்த உறவினர்களிலும் ஒருவரை கூட மதுக்கரை போலீசார் கைது செய்யாதது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

பத்திரிகையாளர் பாதுகாப்பை  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதிப்படுத்தி கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதற்கிடையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்றது, 27-9-21 இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை. சம்பவம் நடைபெற்றபோதே, கோவை சரக ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட தமிழக காவல்துறை உயரதிகாரிகளுக்கு போனில் தகவல் தரப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஜீப்பில் விரைந்து வந்து விசாரணை நடத்திய மதுக்கரை ஆய்வாளர் வைரத்திடம் வாய்மொழியாக வாக்குமூலம் தரப்பட்டது. அன்று இரவு 9 மணியளவில் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் எழுத்துப்பூர்வமாக புகார் தரப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் புகார் மனு தரப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கே.பூபதி உண்மை புகார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு பயந்துபோன கும்பல், 3 ஆதாரமில்லாத பொய் புகார்களை கையில் வைத்து மிரட்டி வருகிறது.

கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில் எந்த நேரமும் கைதாகலாம் தப்பிக்கவும் மிரட்டவும் பா.ஜ கும்பல் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

கோவை மாவட்டம், நாச்சிபாளையம் பா.ஜ பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, சொத்து விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ததாக, அவரே ஒப்புக் கொண்டு மதுக்கரை காவல்நிலையத்தில் எழுதி கொடுத்த கடிதம் பொதுவெளியில் பரவி வருகிறது.

கட்டப்பஞ்சாயத்துக்கு உடன்படாத ஆத்திரத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தி பத்திரிகையாளர் கே.பூபதியிடம்  போன்களை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார், பா.ஜ நிர்வாகி.

பஞ்சாயத்து தலைவி கணவரும் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ பொதுச்செயலாளர் அப்பு என்கிற கிருஷ்ணசாமியை சொத்து விசயத்தில் முடித்து தர கட்டப்பஞ்சாயத்து பேசுமாறு தாங்கள் கேட்டு கொண்டதாக, உறவினர்கள் தங்கள் கைப்பட மதுக்கரை காவல்நிலையத்தில் அளித்த கடிதம் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

பா.ஜ நிர்வாகி கட்டப்பஞ்சாயத்துக்கான இரண்டு புகார் கடித ஆதாரங்கள் பலமாக இருந்தும், புகார் கொடுத்து 15 நாட்களுக்கு மேலாகியும்  தாக்கியவர்களை கைது செய்யாமல் மதுக்கரை காவல்துறை அமைதியாக உள்ளது.

தமிழக காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ கும்பலை கூண்டோடு கைது செய்ய உத்தரவிடுவார்களா?

நாளைய வரலாறு புலனாய்வு  இதழ் செய்தியாளர்,

-ஆர்.கே.பூபதி.

Comments