தொடர் கனமழையால் மண்சரிவு!!

 

  -MMH

   கோவை டாப்ஸ்லிப் பரம்பிக்குளம்  செல்லும் சாலையில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிக்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளது, பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்லவும், அப்பகுதி கடைகளுக்கு  பொருட்கள் எடுத்து வரவும் வேறு சாலை இல்லாததால் மக்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்துசென்று பொருட்களை எடுத்து வருகிறார்கள்.

கனமழையால் அப்பகுதியில் மின்கம்பி மீது மரம் விழுந்ததால் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

-சா. பிரசாந்த்.

Comments