விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் காரை ஏற்றிய சம்பவத்தின் அதிரவைக்கும் காணொளி!

        உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் காரை ஏற்றிய சம்பவத்தின் காணொளிக்காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நெஞ்சை பதை பதைக்கும் அந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. அந்தக் காணொளியில் சாலையில் நிற்கும் விவசாயிகளின் பின்புறமாக வேகமாக வரும் கார், அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்தக் காணொளியை டிவிட்டரில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். அந்தக் காணொளி பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ளது.

காரை ஏற்றி விவசாயிகளைக் கொன்றவர்களை இதுவரை கைது செய்யாத உத்தரபிரதேச பாஜக அரசு, அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்திய கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- பாரூக்.

Comments