தொடர் மழை காரணமாக நிரம்பி வழியும் நீர்நிலைகள்.. விவசாயிகள் மகிழ்ச்சி! நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பலரும் நெகிழ்ச்சி! !

 

  -MMH

   கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. 

இந்த ஆறு மூலம் கோவை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகின்றன.

தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின. 

அதில் நொய்யல் ஆற்றின் அருகே உள்ள முதல்குளமான செம்மேடு உக்குளம் மற்றும் வேடபட்டி புதுக்குளம், கோளராம்பதிகுளம், நகராஜ புரம் நரசாம்பதி குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், முத்தண்ணன் குளம், பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்க நாராயணசமுத்திர குளம், சிங்காநல்லூர் குளம், இருகூர் குளம் ஆகிய 11 குளங்கள் நிரம்பி வழிகிறது. 

இது தவிர, செல்வ சிந்தாமணி குளம், ஒட்டர் பாளையம் குளம் கண்ணம்பாளையம் குளம் செம்மாண்டம்பாளையம் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிகுளம், பேரூர் பெரியகுளம், சூலூர் பெரியகுளம், நீலம்பூர் குளம், சூலூர் சின்னக்குளம்), சுண்டக்கா முத்தூர் செங்குளம், வெள்ளலூர் குளம் ஆகிய குளங்களுக்கும் தண் ணீர் சென்று வருவதால் அந்த குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

மழையின் தீவிரம் நீடிக்கும் பட்சத்தில் நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்டு உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிய வாய்ப்பு உள் ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments