கவி அருவியில் வெள்ளப்பெருக்கு!! சுற்றுலா பயணிகளுக்கு தடை!!

      -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்வதால் ( குரங்கு அருவி ) கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.

Comments