வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம் !!

  -MMH

    வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம் ; காவல் துறையினர் விளக்கம்.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வட மாநில தொழி லாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநிலங்களை சேர்ந்த சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் பூட்டிய வீடுகளில் திருட்டு, ஏ.டி.எம். கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு விட்டு தப்பி விடுகின்றனர். 

அவர்களை கண்டறிவதில் போலீசாருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. சில நேரங்களில் குற்றவாளிகளின் கைரேகை கிடைத்தாலும் ஆட்களை கண்டறிய முடியாத நிலை இருந்தது. தமிழக கைரேகை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் பிற மாநிலங்களை சேர்ந்த பழைய குற்றவாளிகளை அவர்களின் கைரேகைகள் மூலம் அடையாளம் காணும் வகையில் புதிய மென்பொருள் தமிழக போலீஸ் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தையும் சேர்ந்த குற்றவாளிகளையும் அடையாளம் காண முடியும். 

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

"திருட்டு, கொள்ளை, கொலைகள் உள்ளிட்ட வழக்குகளில் கைரேகை முக்கிய ஆதரமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு குற்றவாளியின் 10 கைவிரல் ரேகைகளும் பதிவேற்றம் செய்யப்ப டும். இதன்படி கோவை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் கைரேகை கள் உள்ளன. தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு மென் பொருளை (செயலி) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களி லும் பதிவேற்றம் செய்யப்படும் குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப் பிட்டு பார்க்க முடியும். உதாரணமாக வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கோவையில் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவரின் கைரேகை கிடைக்கும் பட்சத்தில் அந்த செயலியில் பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு சம்மந்தப்பட்ட நபரை கண்டறிய முடியும். அதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments