தஞ்சையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் கொண்டாட்டம்!!

-MMH

நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ஒரு நம்ப முடியாத அதிசயம், நடிப்பின் சக்கரவர்த்தி. அவரின் 93வது பிறந்த தினம் இன்று. கலைத்தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சிவாஜி கணேசனை கௌரவப்படுத்திய கூகுள் நிறுவனம்.

மேலும், சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் அவரை கௌரவிக்கும் வகையில் அவர் படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது. தஞ்சையின் பிரதான  இடமான ராமநாதன் ரவுண்டானா அருகில் சிவாஜியின் படத்திற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் சிவாஜியின் உறவினர்கள் அதிகமாக வசிப்பதால் அவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் அவரது பிறந்த நாள் விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-v.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments