பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 50க்கும் மேற்ப்பட்டோர் "2019ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் இளநிலை ஆய்வாளர் தட்டச்சர் ஆகியோரின் தகுதிக்காண் பருவ விளம்புகை தேதியில் உடன் வெளியீடு செய்யப்பட வேண்டும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மாவட்ட நிர்வாகிகளை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் கோரிக்கைகளை தெரிவித்து விட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
- சீனி,போத்தனூர்.
Comments