கலைஞர் மு.க போட்ட ஒரே ஒரு போன் கால்..!! முதல் முறையாக மனம் திறந்த 'இம்சை அரசன்' வடிவேலு..!!

 

  -MMH

   தான் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் வெளி வருவதற்கு முக்கிய காரணம் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் தான் என்று கலைஞர் அவர்களுக்கு வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் வசூலை குவித்த  முக்கியமான படங்களின் வரிசையில் இடம் பிடித்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படம். இப்படம் வெளிவருவதற்கு தயாரான நிலையில் சென்சார் போர்டின் மூலம் சிக்கல் நிலவியதாகவும் இதைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்துக் கூறியபோது ஒரே ஒரு போன் காலில் சிக்கலைத் தீர்த்து வைத்து படம் வெளியாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மு. கருணாநிதி அவர்கள்தான் என்று முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் வடிவேலு . இதைப்பற்றி வடிவேலு அவர்கள் கூறுகையில்;

ராஜா குதிரை மேலே போவது, குதிரைகளை அதிகம் பயன்படுத்தியது போன்ற  விலங்குகள் நல வாரியத்தின் பிரச்சனையால்  சென்சார் சான்றிதழ்  கிடைப்பதில் சிக்கல் நிலவியதாகவும் இதற்காக வேண்டி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் இரண்டு பேரையும் தன்னுடன் அழைத்துச் சென்று கலைஞர் மு கருணாநிதி அவர்களை சந்திக்கச் சென்றதாகவும். அப்போது கலைஞர் அவர்கள் என்னையா வடிவேலு இந்தப் பக்கம் என்று கேட்க ஐயா ராஜா குதிரையில் போகக்கூடாதாதாம், குதிரைகள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது சொல்லி இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு  சென்சார் போர்டு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருக்குதுங்க யா என்று நான் சொல்ல ' ராஜா குதிரையில் போகாமல்,  குவாலிஸில்யா போவாரு என  நகைச்சுவையாக கூறிய கலைஞர் அவர்கள் அந்த சமயத்தில் டெல்லியில் இருந்த எம்பி ராஜாவிடம் போன் செய்து இந்த பிரச்சினையினை பாருங்கப்பா என்று  சொல்ல  அந்த  போன் எங்கள் சிக்கலைத் தீர்த்தது , படம் வெளியானது என்று மனம் திறந்தார் நடிகர் வடிவேலு. இதற்காக தான் கலைஞர் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் அவரையும் என்றும் மறக்க மாட்டேன் என்று மன நெகிழ்ச்சியுடன் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

தற்போது 'நாய் சேகர் ரிட்டன்ஸ் ' என்ற படத்தில் நடித்து வருவதாகவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படத்தை வெளியீட்டு  மீண்டும்  மக்களை சந்தோசப்படுத்துவேன் என்று  தன் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தந்துள்ளார் நடிகர் வடிவேலு அவர்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments