கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்பத் தலைவரின் அனுமதி தேவையில்லை.!! தமிழக அரசு அதிரடி!!!

 

-MMH 

             தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்பத் தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை கோரும் போது விவாகரத்து போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம். அதனால் பலருக்கும் சிரமமாக இருந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெறுவதற்கு குடும்பத் தலைவரின் அனுமதி பெற அவசியமில்லை என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு எந்த ஒரு ஆவணங்களையும் கேட்க வேண்டாம் என்று சார்நிலை அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் விழிப்புணர்வு அமைப்பு,

-Lnஇந்திராதேவி முருகேசன்.

Comments