சிங்கம்புணரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த கோவில்மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்!!!

-MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள கிருங்காகோட்டையில் 25 அடி ஆழமான தண்ணீர் இல்லாத கிணற்றில் கோவில் மாடு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் தவறி விழுந்துள்ளது.

பொதுமக்கள் அந்தக் கிணறைப் பயன்படுத்தாது இருந்த நிலையால் மாடு அதற்குள் விழுந்தது சில நாட்கள் யாருக்கும் தெரியவில்லை. தற்செயலாக கிணற்றின் உரிமையாளர் அங்கு சென்ற போது கோவில்மாடு கிணற்றில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கோவில் மாட்டை பத்திரமாக மீட்டனர். கிணற்றில் கோவில்மாடு விழுந்து 4 நாட்கள் பின் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதுகுறித்து தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் கூறியதாவது, 'இந்தப்பகுதியில் மாடுகள் கிணற்றில் தவறி விழுவது தொடர்கதையாகி வருகிறது. கிணற்றின் உரிமையாளர்கள் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்தால் மட்டுமே மாடுகள் கிணற்றில் விழுவதை தவிர்க்கலாம்' என்றார்.


- அப்துல்சலாம்.

Comments