பொள்ளாச்சி அருகே தேனீ கொட்டி ஒருவர் உயிரிழப்பு..!!

 

-MMH

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் கடந்த சனிக்கிழமை உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அங்கிருந்த மரத்தின் மீது இருந்த தேன்கூட்டில் இருந்து தீடிரென பறந்து வந்த தேனீகள் கூட்டத்தில் இருந்தவர்களை துரத்தியது. தேனியிடம் கடி வாங்காமல் தப்பிக்க அனைவரும் அந்த பகுதியில் இருந்து வேகமாக வெளியேறினர். இருப்பினும் 20க்கும் மேற்பட்டவர்களை தேன் கொட்டியது. 

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தேன்கூட்டை அகற்ற பலமுறை தீயணைப்பு துறைக்கு புகாரளிக்கப்பட்டும் அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.பொள்ளாச்சி.

Comments