எச்சரிக்கையும் மீறி இருசக்கர வாகனத்தில் ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற வாலிபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு!!


    -MMH
   பொள்ளாச்சி வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக  மழை அதிகளவில் இருந்ததால் ஆழியார் அணை  முழு கொள்ளளவை எட்டியது, இதனை அடுத்து அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நேற்று மாலை அணை திறக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுதூர் தரைப் பாலத்திற்கு மேலே தண்ணீர் கரைபுரண்டு சென்றதால் தரைப்பாலத்தில் யாரும் செல்ல வேண்டாம் என மீனாட்சிபுரம் காவல்துறையினர் தடுப்பு அமைத்து மாற்றுப்பாதையில் டேம் வழியாக செல்லும் படி அறிவுறுத்தி சென்றனர்.

இதனை அடுத்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் டேம் வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் தரைப்பாலத்தில் ஒரு சிலர் பயணிக்கத் தொடங்கினர் இதை கண்காணித்த இப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர் எச்சரிக்கையையும் மீறி சுங்கம் கோபாலபுரம் ஆர் டி ஓ அலுவலகம் அருகே உள்ள முனியன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தரை  பாலத்தை கடக்கும் பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 

இதைக்கண்ட அப்பகுதியில் கரையோரத்தில்  நின்றிருந்த மணி என்பவர் அவரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை துச்சமென எண்ணி ஆற்றில் குதித்தார். கரடு முரடான பாறைகளில் முட்டி மோதி ஒருவழியாக அவரைப் பிடித்து ஒரு இடத்தில் நிறுத்தினார், பின்பு  சரவணன் என்பவர் அவருக்கு உதவியாக அவரும் ஆற்றில் குதித்து காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். முயற்சிகள் தோல்வியுற்றது காரணம் காட்டாறு வெள்ளம் சீறிப் பாய்ந்து கொண்டே இருந்தது.


இதனை அடுத்து மீனாட்சிபுரம் காவல் நிலையத்திற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மீனாட்சிபுரம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் ஆற்றில் சிக்கியுள்ள மூவரையும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர் இவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக மண,சரவணன், சுந்தரம்,சின்னு,  சுரேஷ் உள்ளிட்டோர் கைகோர்த்தனர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு அவரை மீட்டு அம்பராம்பாளையம் ஆல்வா  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அவருக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்கக்கூடாது மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஆற்றங்கரை பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் கூட்டு  பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக துணைத் தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார், பொள்ளாச்சி,

Comments