போலீஸ் அடாவடியால் மூடிய திருச்சி 'அக்கா கடை' மீண்டும் துவக்கம்!!

   -MMH

  திருச்சியில் காவல்துறை அடாவடியால் மூடப்பட்ட அக்கா கடை இயற்கை உணவகம் பச்சை வண்ணத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறப்பு விழா கண்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, அக்கா கடை நம்மாழ்வார் இயற்கை உணவகம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் வனஜா  இந்த கடை மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வாழ்க்கைக்கு வழிகாட்டி வந்தார். இந்த உணவகத்தில் வாழைத்தண்டு, கீரை சூப் வகைகள் சுவையாக குறைந்த விலையில் தரப்பட்டது. இதனால் நாளுக்குநாள் வாடிக்கையாளர்கள் கூட்டம் குவிந்தது.

இதனால் பொறாமை கொண்ட அப்பகுதி சில வியாபாரிகள் போக்குவரத்து போலீசாரை தூண்டி விட்டு கடையை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து "நாளைய வரலாறு" புலனாய்வு பத்திரிக்கை இணைய தளத்தில் செய்தி வெளியிட்டு காவல்துறை அராஜகம் அம்பலமானது.

பல கட்ட போராட்டம், கோரிக்கை மனு அளிப்பு என முயற்சிகளுக்கு பின்னர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க ஆதரவுடன் புதிய கடைக்கு இயற்கை உணவகம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது.

திருச்சியில் இயற்கை பொருட்களை கொண்டு தயாரித்து வழங்கும் " அக்கா கடை "  உணவகத்தை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் துவக்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி  வேலுச்சாமி, எழுத்தாளர் சங்கத் தலைவர்  ஜவஹர் அறிமுகம், சித்த மருத்துவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்,  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இந்திரஜித், " சாந்திவனம் " அரசப்பன், " மை குரோ கிளீனிக் " டாக்டர் வனிதா மீனாட்சி, சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாலாஜி,  டெல்டா அ.எழில், வேதா ஸ்டாலின், இயக்குனர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கை உணவுகள் தந்து வரவேற்றார் திருச்சி அக்கா கடை இயற்கை உணவகம் உரிமையாளர் வனஜா !

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில் எளிமையாக துவக்க விழா கண்ட இயற்கை உணவகம்  மூலம் இன்னும் 5 ஆண்டுகளில் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி 100 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் திருச்சி பெண் தொழிலதிபர் வனஜா" என பெயர் எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் பலரும் வாழ்த்தினர்.

உழைப்பால் உயர்ந்த அனைத்து தொழிலதிபர்களும் ரோட்டோர தள்ளுவண்டியில் ஆரம்ப வாழ்க்கையை தொடங்கியவர்களே. நிச்சயம் அந்த வரிசையில் பெண் தொழிலதிபராக வனஜா இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை..!!

பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments