மதுபான பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்ற வாலிபர் ; காவல்துறையினர் கைது செய்து விசாரணை!

-MMH

         கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியில் உள்ள காதறுத்தான் மேடு பகுதியில் ரோந்து சென்றனா. 

அப்போது அந்த பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மருதபாண்டி (வயது 18) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments