கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கச் சென்ற விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வேண்டுகோள்! !

 

  -MMH

   கோவை: தொழிற்பேட்டை அமைக்க, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்த விவசாயிகள், கலெக்டர் காலில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், நேற்று நடந்தது. அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில், 6 கிராமங்களில், தொழிற்பேட்டை அமைக்க, 1,504 எக்டர் பரப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. '70 ஆண்டுகளுக்குப் பின், அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேறும் தருவாயில் உள்ளது.

இங்கு, தொழிற்பேட்டை அமைந்தால், 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, நிலம் கையகப்படுத்தக் கூடாது' எனக்கூறி, அன்னுார் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, சுமார் 200 விவசாயிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் சமீரனிடம், தனித்தனியாக மனு அளித்தனர். மனுவை அளித்த பின், சில விவசாயிகள் கலெக்டரின் காலில் விழுந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments