அனல் பறந்த சேவல் கட்டு "ஆடுகளம்' ..!! போலீசார் அதிரடி ..!!
அன்னூர் பகுதி பச்சா கவுண்டனூர் பகுதியில் 2 இடங்களில் பணம் வைத்து சேவல் சண்டை 11 பேர் கைது காவல்துறையினர் நடவடிக்கை
அன்னூர் பச்சா கவுண்டனூர் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து அன்னூர் போலீஸ் S.I சிலம்பரசன் தலைமையில் பச்சா கவுண்டனூர் பள்ளம் அருகாமையில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1000 ரூபாய் பறிமுதல் செய்தனர் இதுபோன்று S.I வெங்கடேசன் தலைமையிலான போலீஸ் குழு பச்சா கவுண்டனூர் சுடுகாடு அருகாமையில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். இவர்களை கைது செய்ததை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments