செவிலியர்கள் செய்த தரமான சம்பவம் !! சாலை விதிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி...!!

 

-MMH

    கோவை அவிநாசி ரோட்டில் ஜிகே எண்ணம் சிக்னலில் செவிலியர் கல்லூரி மாணவியர்கள் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு..

சாலை விதிகளை பின்பற்ற கூறியும். ஒருநா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய 50க்கும் மேற்பட்ட உயிர் கிளப் உறுப்பினர்களான  குப்புசாமி நாயுடு மருத்துவக்கல்லூரியில் பயிலும் செவிலியர்கள் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி அமைப்புடன் சேர்ந்து  அவிநாசி சாலையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். 

சிக்னலை மதிப்போம் சிக்கலை தவிர்ப்போம், வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிர்ப்போம், தலைக் கவசம் அணிவோம், சீட்பெல்ட் அணிவோம்  போன்ற பதாகைகளை ஏந்தியவாறு நின்ற வண்ணம் விழிப்புணர்வை நடத்தினர். இதைப்பற்றி மாணவி ஒருவர் கூறுகையில் "அகோதிக்க அமிர்தவ்   மஹோஇய்ட்சவ் " என்ற  கொண்டாட்டம் அக்டோபர் 3 வரை நடைபெறுவதால் அதுவரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடரும் என்று அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments