சேரன்மாநகர் பள்ளிவாசலில் மீலாது விழா..!! சிறப்பு பிரார்த்தனை மற்றும் மதிய உணவு வினியோகம்..!!!

 

-MMH

     கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சேரன்மாநகர் பள்ளிவாசலில் நேற்று மீலாது விழா நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மௌலிது ஷரீஃப்  என்னும் புகழ் மாலை ஓதப்பட்டு,   பயான் மற்றும் சிறப்பு  பிரார்த்தனையுடன் மதிய உணவும் வினியோகம் செய்யபட்டது.  காலை 10:30  மணிக்கு மௌலூது சரிபுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

ஆன்மீக நிகழ்வுகளை பள்ளிவாசலின் இமாம் மௌலவி ஹாஃபிழ் இதயத்துல்லா அவர்கள் வழி நடத்தினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் மோதினார் அத் தவுல்லாஹ், செயலாளர் ஹாஜி லியாகத் அலி , பொருளாளர் ஹாஜி நயாஸ் அஹமத், பள்ளியின் மேலாளர் திரு  ஜின்னா, முத்தவல்லி ஹாஜி ஜவாருதின்  ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி நிர்வாகத்தினர்   ஹாஜி பஷீர் அகமது, ஜாபர் அலி கான், திரு. நேஹமத் இப்ராஹிம், ஹாஜி சாகுல் அமீது, திரு.சர்புதீன்,  மற்றும் ஜமாத்தார்கள் அஜீஸ், ஹனிஃபா,  காஜா, இஸ்மாயில், தாரிக், அன்வர், அக்பர்,சலீம், பாபுலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments