இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) யின்போதை எதிர்ப்பு பரப்புரை தீவிரம்!
காந்தியாரின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 12 வரை 10 நாட்களுக்கு சார்பில் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
மஜக பிரமுகர் வாணியம்பாடி வசீம் அக்ரம், கஞ்சா வினியோக கும்பலால் கடந்த செப் 10, அன்று படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ,தமிழகமெங்கும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக எழுந்துள்ளது.
இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு மனிதநேய ஜனநாயகட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப்பேரவை "போதை பொருட்களுக்கு எதிராக போராடுவோம் : பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவோம் " என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ளது.
அந்த வகையில் நேற்று தலைவர்கள், அறிஞர்கள்,பிரபலங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பதாகை ஏந்தும் நிகழ்வு முன் எடுக்கப்பட்டதுநேற்றைய பரப்புரையில் மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஜாமியா மஸ்ஜித்பள்ளியில் நேற்றைய ஜூம்ஆ தொழுகைக்கு பின் பள்ளியின் இமாம் அவர்கள் பதாகை ஏந்தினார்.
இது போல் தொழுகைக்கு வந்த பல தலைவர்கள், அறிஞர்கள் பொதுமக்கள் மாவட்ட துனைசெயலாளர் நீடூர் மிஸ்பாஹுதீ்ன்
மாவட்ட விவசாய அணி செயலாளர் நீடூர் லியாகத் அலி, ஒன்றிய செயலாளர் நீடூர் ஜப்ருதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நீடூர் அமீன், தொழில் விஷயமாக மாயவரம் வருகை தந்திருக்கும் கோவை மாவட்ட IKP செயலாளர் HM முஹம்மது ஹனீப், தென்காசி பொன்னானி யாஸ் (எ) அபு, கோவை யாசீன் நீடூர் பஹத் அசார் மற்றும் பொதுமக்கள் பலரும் அமைப்பு கட்சி பேதமின்றி கலந்து கொண்டனர்.
இந்த 10 நாள் தொடர் பரப்புரையானது தினம் ,தினம் ஒரு வகையாக வழி நடத்தப்படுகிறது. வலைதள பரப்புரைகள், பதாகை ஏந்திடும் பரப்புரைகள்,வாகன பரப்புரைகள், வீதி முனைகளில் முழக்கமிடும் பரப்புரைகள், துண்டறிக்கை பரப்புரைகள், சுவரொட்டி மற்றும் சுவரெழுத்து பரப்புரைகள், காணொளி கருத்தரங்குகள், கலெக்டர் மற்றும் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தல், தனிநபர் கலந்துரையாடல்கள், பாதிக்கப்பட்டோர் மீண்டு வர அறிவுரை என பன்முகத்தன்மையோடு இந்த 10 நாள் பரப்புரை நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.பரப்புரைக்கு பொதுமக்களிடத்திலும் பிரமுகர்களிடத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது. பரப்புரையாளர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. என்று மாவட்ட துனைசெயலாளர் மிஸ்பாஹுதீன் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments