வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வந்த T23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது! பொதுமக்கள் நிம்மதி! !

  -MMH

   தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடையை இந்த T23 புலி. அந்தப் புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு அடித்து கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றது.

இதை தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்துக்கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது. அதனையடுத்து, புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தநிலையில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அதனையடுத்து, அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போரடி வந்தனர். அதனையடுத்து, அந்தப் புலி வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தது. நேற்று முன்தினம் புலியின் மீது மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது. இதையடுத்து, போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் வேட்டை முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து 21 நாட்களாக தேடப்பட்டுவந்த புலி, நேற்று இரவு மசினகுடி - முதுமலை சாலையில் நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழு நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் T23 உடம்பில் செலுத்தப்பட்ட நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் மயக்க நிலையில் தப்பி ஓடியது.

இதைத்தொடர்ந்து, இன்று மயக்கநிலையில் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற புலியை நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தேடி வந்தனர்.

இந்நிலையில், 2 முறை மயக்க ஊசி செலுத்தியும் பிடிபாடமல் போக்குகாட்டிய புலி 2வது முறையாக மயக்க ஊசி செலுத்தியபோது, பிடிபட்டது. மாயார் வனப்பகுதியில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததாக வனத்துறை தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments