கோவையில் 13 அதிகாரிகள் மாற்றம்..!! ஆட்சியர் உத்தரவு..!!

 

    -MMH

   கோவை மாவட்டத்தில் 13 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி மதுக்கரை வட்டாட்சியா் ஏ.நாகரஜனை தனி வட்டாட்சியா் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், கோவை தெற்கு வட்டாட்சியா் புனிதவதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தனி வட்டாட்சியா் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும்,

அன்னூா் வட்டாட்சியா் எஸ்.இரத்தினம் ஆதி திராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், ஆனைமலை வட்டாட்சியா் என்.விஜயகுமாா் பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் ஏ.இசட். பா்சானா, (தனி வட்டாட்சியா், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுலகம்) , எஸ்.சரண்யா ( தனி வட்டாட்சியா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்), ஏ.வி.சிவகுமாா் (தனி வட்டாட்சியா், ஆதிதிராவிடா் நலத் துறை), வி.தங்கராஜ் (தனி வட்டாட்சியா், சமூக பாதுகாப்புத் திட்டம்), எஸ்.சிவகுமாா் ( தனி வட்டாட்சியா், நகர நில வரி திட்டம், மேட்டுப்பாளையம்),

எஸ்.சதீஷ் (வரேவற்பு அலுவலா், ஆட்சியா் அலுவலகம்), என்.பானுமதி (தனி வட்டாட்சியா், சமூக பாதுகாப்புத் திட்டம், ஆனைமலை), பி.வெங்கடாசலம் (கோட்ட கலால் அலுவலா், பொள்ளாச்சி), ஜி.தணிகைவேல் (சாா்-ஆட்சியரின் நேர்முக உதவியாளா், பொள்ளாச்சி) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments