கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 1,53,052 தற்கொலைகள் இந்தியாவில் நடந்துள்ளன...

-MMH 

        திகபட்சமாக மகாராஷ்டிராவில் 19,909 பேரும், தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்திய பிரதேசத்தில் 14,578 பேரும், மேற்கு வங்காளத்தில் 13,103 பேரும், கர்நாடகாவில் 12,259 பேரும் அதிகபட்சமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலை முடிவை எடுத்தவர்களில் 33.6 சதவீதம் பேர் குடும்ப பிரச்னை காரணமாகவும், உடல்நலன் சரியில்லாததால் 18 சதவீதம் பேரும், போதைப்பொருள் பழக்கம் மற்றும் அவற்றுக்கு அடிமை காரணமாக 6 சதவீதம் பேரும், திருமண ரீதியிலான பிரச்னையால் 5 சதவீதம் பேரும், காதல் தோல்வியால் 4.4 சதவீதம் பேரும்,

கடன் காரணமாக 3.4 சதவீதம் பேரும், வேலையின்மையால் 2.3 சதவீதம் பேரும், தேர்வில் தோல்வியை சந்தித்ததால் 1.4 சதவீதம் பேரும், தொழில் மற்றும் வேலை காரணமாக 1.2 சதவீதம் பேரும், வறுமையால் 1.2 சதவீதம் பேரும், உறவினர்களின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் 0.9 சதவீதம் பேரும்,

சொத்து தகராறு காரணமாக 0.9 சதவீதம் பேரும், சந்தேகத்திற்கிடமான/ சட்டவிரோத உறவு காரணமாக 0.5 சதவீதம் பேரும், சமூகத்தில் பெயர் புகழ் வீழ்ச்சியடைந்ததால் 0.4 சதவீதம் பேரும், குழந்தையின்மையின் காரணமாக 0.2 சதவீதம் பேரும், பிற காரணங்களினால் 9.8 சதவீதம் பேரும், காரணம் இல்லாமல்/தெரியாமல் 10.4 சதவீதம் பேரும் இந்த முடிவை நோக்கிச் சென்றுள்ளனர்.

தொழில் ரீதியாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் தினக்கூலிகள் 24.6 சதவீதம், குடும்ப பெண்கள் 14.6 சதவீதம் வேலையின்மையால் 10.2 சதவீதம், பணியாளர்கள்/ மாத சம்பளம் வாங்குபவர்கள் 9.7 சதவீதம், மாணவர்கள் 8.2 சதவீதம்,

விவசாய பிரிவில் 7 சதவீதம், ஓய்வுபெற்றவர்கள் 1 சதவீதம், மற்றவர்கள் 13.4 சதவீதம் பேர் தற்ெகாலை செய்துள்ளனர். பொருளாதார நிலை பற்றி ஆய்வு செய்ததில் 2020ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் 63.3% பேரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு இறந்தவர்கள் தூக்கிட்டுக்கொண்டு 57.8 சதவீதம், விஷம் உட்கொண்டு 25 சதவீதம் பேர், தண்ணீரில் மூழ்கி 5.2 சதவீதம் பேர், தீயிட்டுக்கொண்டு 3 சதவீதம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 16,883 பேர் தற்கொலை: தினக்கூலிகள், குடும்ப பெண்களே அதிகம்

ஆண்டு வாரியாக தற்கொலை செய்து கொண்டவர்கள் :

ஆண்டு    தற்கொலை

2016    1,31,008

2017    1,29,887

2018    1,34,516

2019    1,39,123

2020    1,53,052

-மூன்றாம் கண்.

Comments