பாபநாசம் தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட 53 குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வழங்கினார்!!

   -MMH 

   பாபநாசம் தாலுகாவில் பெய்த கன மழையினால் கூரை, ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. கால்நடைகளும் இறந்துள்ளது. இந்த நிலையில் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கோவி.அய்யாராசு  பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கன்றுகுட்டி ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு மாட்டிற்கு ரூ.10 ஆயிரமும் மற்றொரு மாட்டிற்கு ரூ 30 ஆயிரமும் ஆக மொத்தம் 43 ஆயிரமும், முழுமையாக பாதிக்கப்பட்ட 5 குடிசை வீடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விதமும் பகுதியாக பாதிக்கப்பட்ட 45 குடிசை வீடுகளுக்கு ரூ.4100 விதமும்  மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 500 ஆக மொத்தம் 53 குடும்பங்களுக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரொக்கப் பணமும் நிவாரண உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள் பிரியா, செந்தில்குமார், உதவியாளர் சித்ரா, பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர்  ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் நடராஜன், மதியழகன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹிபாயதுல்லா மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் ரகுமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.                   

-ருசி மைதீன், தஞ்சாவூர்.

Comments