கோவை மாவட்டத்தில் 58 மது பார்களுக்கு சீல் !
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நகரப்பகுதியில் நாற்பத்தி ஒரு டாஸ்மார்க் கடைகளும் புறநகர் பகுதியில் 74 கடைகளும் என மொத்தம் 115 கடைகள் செயல்பட்டு வருகின்றன . இந்தக் கடைகளில் அருகே தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன கொரோனா காரணத்தால் பல மாதங்களாக மூடிக்கிடந்த டாஸ்மாக் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் துவங்கின இந்நிலையில் பெரும்பாலானவர்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தன இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உடனே உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தினார் ஆனால் அதிகாரிகள் அளித்த காலக்கெடு க்குள் 58 டாஸ்மாக் பார்களில் உரிமம் மீட்கப்படவில்லை இதனையடுத்து கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 58 டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் மூடினர் உரிமம் பெற்ற பின் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments