குடியாத்தம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 700 பேருக்கு போர்வைகள்!!

   -MMH 

   குடியாத்தம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 700 பேருக்கு போர்வைகள்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு  நகரில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளோருக்காக 700 போர்வைகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆ.செல்லபாண்டியன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ் ஆகியோர் வழங்கினர். போர்வைகளை சமூக ஆர்வலர் அ.சிட்டிபாபு, அவரது  பள்ளி நண்பர்கள் பரணிதரன், கமல்ஹாசன், செந்தில் மற்றும் புத்தர் நகர், என்.எஸ்.கே. நகர் பகுதி இளைஞர்களின் துணை யுடன் வழங்கப்பட்டது.

-ரமேஷ், வேலூர்.

Comments