சிறுவனை கத்தியால் குத்தி செல்போன்பறிப்பு!!
கோவை சிட்ரா பகுதியை சேர்ந்தவர் சூர்யா (18). காளப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். பகுதி நேரமாக சிட்ரா அருகே உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், சிறுவனின் மொபைல் போனை கேட்டு மிரட்டினர். கொடுக்க மறுத்ததால் அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை குத்தி மொபைல் போனை பறித்து அங்கிருந்து சென்று விட்டனர்.
காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுவன் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் உதவியுடன் செல்போன் பறித்து தப்பிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments