ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை தாக்கிய சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை! !

 

    -MMH

  காரமடை அருகே மலையடிவாரத்தில் ஆதிமாதையனூர் உள்ளது. இங்குள்ள விவசாய விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

இந்த நிலையில்  வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியே வந்தது. பின்னர் அந்த சிறுத்தை ஆனந்தன் (வயது 47) என்பவர் தோட்டத்துக்குள் புகுந்து 10 மாத கன்றுக்குட்டியை தாக்கியது டன் அதை தூக்கிச்சென்றது.

 இதனால் அந்த கன்றுக்குட்டி அலறியது. அதன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த சிறுத்தையை துரத்தினார்கள். இதனால் சிறுத்தை, கன்றுக்குட்டியை கீழே போட்டுவிட்டு வனப் பகுதிக்குள் தப்பி ஓடியது.

 இது குறித்து தகவல் அறிந்த காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில நாட் களுக்கு முன்பு வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து கொன்றது. தற்போது கன்றுக்குட்டியை தாக்கி உள்ளது. 

மேலும் சின்னச் சாமி என்பவருக்கு சொந்தமான 2 கன்றுக்குட்டிகளை காண வில்லை. எனவே இங்கு அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments