அலங்கோலமான சாலைகளினால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்! சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!!

    -MMH 

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், நீரார் அணை, உபாசி ஆகிய எஸ்டேட் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை மிகவும் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டது ஆனால் இதுவரை வேலை முழுமையாக நிறைவடையாமல் விட்டுச் சென்றுள்ளார்கள்.


சின்கோனா விருந்தினர் மாளிகையில் இருந்து நீரார் அணை,உபாசி  செல்லும் சாலையின் நடுவே ஆங்காங்கே சிமெண்ட் சாலையை உடைத்துப் போட்டது அப்படியே கிடப்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. 


அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை இதுபோன்ற சாலைகளில் செல்லும் பொழுது அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது இதனால் பொதுமக்களும், மாணவ - மாணவியரும்  மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் குறிப்பிட்ட


நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே இந்த சாலையை மிக விரைவில் சீர் செய்து கொடுக்க  வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்  

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன். திவ்ய குமார், வால்பாறை.

Comments