திசைகாட்டிகளை மறைத்து நிற்கும் முட்புதர்கள் திசைகள் தெரியாமல் திகைத்து நிற்கும் வாகன ஓட்டிகள்!!

   -MMH 

   பொள்ளாச்சி மீன்கரை சாலையில் திவான்சாபுதூர் அடுத்த நாடுகானியம்மன்  கோவில் பகுதியிலிருந்து 6 வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  செமணாம்பதி சாலையை சென்றடைய கிழவன்புதூரை கடந்து 2 வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள செமணாம்பதி வேட்டைக்காரன்புதூர் சாலையை இணைக்கும் பகுதியில் திசைகள் காட்டும் திசைகாட்டிகள் முட்புதர்கள் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வழித்தடத்தில் புதிதாக வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்  திசைகள் தெரியாமல் யாரேனும் வரும் வரை காத்திருந்து திசைகளை கேட்டறிந்து செல்கின்றனர்.

இதனால் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதால் முட்புதர்களை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என  நெடுஞ்சாலை துறையினருக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும்  கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments