திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு!!


  -MMH


   கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது திருநங்கை. இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போன் திருடு போனது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் ஏட்டு மூவேந்தன் வேல்பாரி, 50, விசாரணைக்காக திருநங்கை வீட்டிற்கு சென்ற ஏட்டு மூவேந்தன் வேல்பாரி அங்கு திருங்கையிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருநங்கை, ஏட்டு மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு மூவேந்தன் வேல்பாரி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.


Comments