கோவையில் உஷார் நிலை..!!ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை...!!

   -MMH 

   கோவையில் உஷார் நிலை..!!ஓமைக்ரான் கொரோனா வைரஸ்  கோவையில் பரவாமல் தடுக்க கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை...!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கொரோனா  தாக்கத்தால்  தலைகீழாகி தன் கோர தாண்டவத்தை சற்று குறைத்துக் கொண்ட நிலையில்  இயல்பு நிலை திருப்பி வருகிறது. இருப்பினும் தற்போது மழைக்காலம் என்பதால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கன மழை , ஊரெங்கும் வெல்லும் இன்று மக்களின் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது மீண்டும் ஒரு புது அதிர்ச்சியாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவ்வகை வைரஸ் மிகவும் கொடூரமான தாகவும் உயிர் இழப்புக்கள் அதிகம் ஏற்படலாம் என்றும், முந்தைய கால கொரோனா அறிகுறி போன்று இல்லாமல்  சற்று குறைந்து காணப்பட்டாலும் இதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்று உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில்  விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வைரஸின் அச்சுறுத்தினால் விமான நிலையங்கள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து தீவிரமாக விமானப் பயணிகளை பரிசோதித்த பிறகே போர்டிங் மட்டும் டிபா ரசர் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக கோவை விமான நிலையத்திலும் பயணிகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே, வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.  இதைப்பற்றி விமான நிலைய அதிகாரி கூறுகையில் இப்போது இருந்தே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்தக் கொடிய வைரஸின் தாக்கத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் மீண்டும் ஒரு அலை என்பது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அவர் தன் கருத்தை தெரிவித்தார்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments