தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக உக்கடத்தில் ஆர்பாட்டம் !!

 

-MMH

   உக்கடத்தில் ஆர்பாட்டம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திரிபுராவில் ஆளும் பா. ஜ. க அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.

திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில கும்பல்களால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாத்திட கோரியும், வன்முறையை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும், திரிபுராவில் அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை கண்டித்தும் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக உக்கடம், பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில செயலாளர் சாதிக் அலி இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணைச்செயலாளர் ஜெயினுலாபுதீன் கண்டன உரை நிகழ்த்தினார்  தொண்டரணி செயலாளர் சர்புதீன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் சாதிக் சாகுல் அமீது மாவட்ட நிர்வாகிகள் முஜிபு ரஹ்மான் அப்பாஸ் சிராஜ் தீன் ஆஷிக் அஹமத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நாளையவரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments