தூய்மை, சாலைப் பணியாளர்களுக்கு எம்எல்ஏ செல்வராஜ் பாராட்டு..!!

   -MMH 

  தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை அடுத்து திருப்பூர் ,கோவை மாவட்டங்களில் அரசு துறைகள் இயந்திரம் போல் வேலை செய்யத் தொடங்கியுள்ளன . முதல்வர் வரும் சாலைகள் பராமரிப்பு , சுகாதாரப்பணிகள் போன்றவைகள் வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நாளை திருப்பூர் செல்லவிருக்கும் முதல்வர் வருகை தரும் பாதையில் பராமரிப்பு பணிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ செல்வராஜ் அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்எல்ஏ அவர்களின் இந்த செயல் அவர்களுக்கு சந்தோஷம் அளிப்பதாக இருந்ததாகவும் , பாராட்டுக்கள் நிச்சயமாக எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

-பாஷா திருப்பூர்.

Comments