ஆளே இல்லாத கடையில் டீ ஆகிறது இது தானா..!!! மீண்டும் பாஜகவின் மழை வெள்ள நீர் மீட்புப்பணி ஆகா ஓகோ சாகசம்..!!
ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற இதுதானா? வெள்ளத் தில் இருக்கிறவங்க காப்பாத்த சொன்னா காமெடி பண்றாங்க.
கனமழை எதிரொலி தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக மாறி மக்கள் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்களும் மக்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் காமெடி பண்ணிக் கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வந்த வண்ணம் உள்ளது.
அது போன்ற ஒரு நிகழ்வு தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டி அளவு இருக்கும் தண்ணீரில் ஒருவரை காற்றடித்த ட்யூபில் உட்கார வைத்து இழுத்து வந்து அதே முட்டி அளவு தண்ணீரில் அவரை இறக்கிவிடும் பாஜக எம்எல்ஏ காந்தி அவர்கள் செய்த இந்த மக்கள் பணி ஆஹா ஓஹோ ஐயோ என்னடா கொடுமை இது என்று மக்களால் ''பாரா டபட்ட''' இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது .
-முகமது சாதிக் அலி.
Comments