காவல்துறையினரின் தீவிர இரவு ரோந்து பணி! குற்றச் செயல்களில் ஈடுபடும் பலரும் பிடிபடுவார்கள் என தகவல்! !

   -MMH 

  பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, சூலூர் உள்ளிட்ட புறநகர்பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க கடந்த சில மாதங்களாக வடக்கிபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு, ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை, ஆனைமலை முக்கோணம், சூலூர், பாப்பம்பட்டி உள்பட பல இடங்களில் போலீசார் தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர். வாகனங்களில் ஆயுதங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த ரோந்தின்போது சில நேரங்களில் குற்ற வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சிக்குகின்றனர். 

மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஆசாமிகளும் சிக்குகின்றனர் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments