தொடர் மழை காரணமாக காட்பாடி அடுத்த அறுப்பு மேடு பகுதியில் வீடு இடிந்து விழுந்து நாசம்!!

-MMH

வேலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அறுப்புமேடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் அருப்புமேடு பகுதியில்  சொந்தமாக ஓட்டு வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் என்ற நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ரமேஷின் வீடு இடிந்து விழுந்து முற்றிலுமாக நாசமாகியது. மேலும் வீட்டிலிருந்த டிவி மற்ற பொருட்கள் முற்றிலும் நாசமாகி உள்ளன. ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் சேதமான பொருட்களின் மதிப்பு ரூபாய் 2 லட்சம் ஆகும். 

மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளிலும் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தகவலறிந்து வேலூர் மாநகராட்சி ஓன்றாவது மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments