சிங்கம்புணரி அருகே தந்தை இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை!

 

-MMH

      சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்தவர்கள் சசிகுமார் - லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு முத்துமீனாட்சி (வயது18) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். முத்து மீனாட்சி தற்போது ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வருகிறார். கடந்த வாரம் உடல்நலக்குறைவால் சசிகுமார் இயற்கை எய்தியுள்ளார். அதனால், தந்தையை இழந்த மன உளைச்சலில் இருந்து வந்த முத்துமீனாட்சி, நேற்று மாலை அவரது வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.வி.மங்கலம் காவல் சார்பு ஆய்வாளர் பீட்டர் இது குறித்து வழக்குப் பதிவு செய்ய, ஆய்வாளர் விஜயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

-ராயல் ஹமீது, அப்துல் சலாம்.

Comments