பொது இடத்தில் போலீஸ்காரருக்கு பெண் முத்தம் கொடுத்த நிகழ்வு..!! ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்..!!

-MMH
           கோவை மாவட்டத்தை சேர்ந்த சீருடையில் இருந்த போலீசாருக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுத்த நிகழ்வு: ஆயுதப்படை துணை ஆணையர் சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு.

 கோவை மாவட்டம் வாலாங்குளம் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்டு அழகு படுத்தி வைக்கப்பட்டுள்ளது இதைப் பார்வையிட தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதிக்கு வந்து செல்வதாகவும்.  சம்பவத்தன்று அப்பகுதியில்  ஏராளமான பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் சீருடையில் இருந்த காவலருக்கு பெண்ணொருவர் முத்தமிட்டதை வீடியோ எடுத்த பொதுமக்கள்  சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். 

இதைப் பற்றி அறிந்த ஆயுதப் படை துணை ஆணையர் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் 2017ம் ஆண்டு ஆயுதப்படை காவலராக சேர்ந்துள்ளார் இவர் தற்போது கோவை மாவட்டத்தில் ஆயுதப் படை காவலராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இவர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி விசாரணை செய்த ஆயுதப்படை துணை ஆணையர் முரளிதரன் இச்சம்பவம் உண்மை தான் என்று  தெரியவந்த நிலையில் காவலர் பாலாஜியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments