சாலை குழியில் தேங்கி நின்ற மழைநீரால் இருசக்கர வாகன விபத்து! கீழே விழுந்ததில் பலியான பரிதாபம்!

 

-MMH

      கோவையை அடுத்த அன்னூர் பொன்னேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது25).  இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையத்தில் இருந்து கருவலூருக்கு கள்ளிப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, சாலையில் இருந்த குழியில் மழைநீர் தேங்கி நின்றது. அதில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் சதீஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டும் குழியுமான சாலையில் தேங்கிய மழைநீரில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் தவறி விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-S.ராஜேந்திரன்.

Comments