வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை! காவல்துறையினர் விசாரணை! !

  -MMH

  கோவைபுதூரிலுள்ள குற்றாலம் நகரில் வசிப்பவர் ரமேஷ், தனியார் கல்லூரி பேராசிரியர். குடும்பத்துடன் திருப்பூர் ராக்கிபாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இரு நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்.முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். உள்ளே சென்றபோது, 1.25 கி.கி., எடையுள்ள குத்துவிளக்கு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிந்தது. குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் திருடியவர்களை தேடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments