மருதிப்பட்டியில் கனமழையால் கூரை வீடு இடிந்தது! நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை!!

       -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மருதிபட்டி கிராமத்தில் நேற்றிரவு பெய்த கன மழையினால் முத்தரையர் தெருவில் வசிக்கும் சந்திரன் என்பவரது கூரை வீடு இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அடுத்த வீட்டில் தங்கியிருந்ததனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

வீட்டிலிருந்த பீரோ, கிரைண்டர், பாத்திரங்கள் மற்றுமுள்ள சாமான்கள் அனைத்தின் மீதும் சுவர் இடிந்து விழுந்தால் ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய தங்கள் குடும்பத்திற்கு அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமென்று அவர்கள் கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர். 

இந்த தகவல் கிடைத்ததும் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கமலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments