வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை!! குடியிருப்புகளில் தண்ணீர்!!

 -MMH

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வேலூர் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து, அப்பகுதியில் இன்று பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர்.


அப்பொழுது அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம்அகற்றுவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பாகாயம் காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-ரமேஷ், வேலூர்.

Comments